கோவை,
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கினார். இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது; பள்ளி பருவத்திலேயே ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மிதிவண்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கப்பட உள்ளது. அதனால் மாணவர்களின் எதிர்காலமும் நன்றாக இருக்கும். பொதுமக்கள் பலரும் ஹெல்மெட் அணியாதது ஒரு பேஷன் என்று நினைக்கிறார்கள். அவ்வாறு இருக்கக் கூடாது. என்றார்.
தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீது விமர்சனங்கள் எழுவது குறித்தான கேள்விக்கு யார் தவறு செய்திருந்தாலும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார். அமைச்சர் விஜய பாலாஜி காவல் கண்காணிப்பாளரை இரவு நேரத்தில் வீட்டில் அழைத்து பேசியது என்று சர்ச்சை கிளப்பியுள்ள கேள்விக்கு அது முகாந்திரம் இல்லாத தகவல் என்றார்.