கோவை,
கோவை, நீலகிரி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை ஒன்று மேட்டுப்பாளையம் அருகே குத்தாரி பாளையத்தில் உள்ள பவானி ஆற்றில் காணப்பட்டது. அது பாறையின் மீது ஹாயாக படுத்து இருந்தது. இதனை ஆற்றில் குளிக்க சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த முதலையை பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.