சென்னை,
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே இடைவெளி உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு முன்கூட்டியே விடுமுறை விட தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
டாஸ்மாக் கடைகள் அனைத்தும் 21.04.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று முற்பகல் 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நள்ளிரவு 12 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான 04.05.2026 (திங்கட்கிழமை) ஆகிய 4 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும்.
அதன்படி நாளை முதல் வாக்குப்பதிவு நாளான 23-ம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான மே நான்காம் தேதியும் டாஸ்மாக் மது கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அதனால் இன்று மாலை முதல் தமிழகத்தில் உள்ள டாஸ்மார்க் மது கடைகள் அனைத்திலும் மது பிரியர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது தலைநகர் சென்னையில் உள்ள மது கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்ததை காண முடிந்தது. மூன்று நாட்களுக்கு தேவையான மதுபான வகைகளை மது பிரியர்கள் வாங்கிச் சென்றனர். இதனால் பண்டிகை காலங்களில் நாளொன்றுக்கு விற்பனையாகும் மதுபான அளவைவிட இன்று கூடுதலாக மது விற்பனை நடைபெற்றிருக்கும் என்று டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.