தமிழக செய்திகள்

மனைவியின் தலையில் கத்தியால் குத்திய கொடூர கணவன்

அனிஷ் மார்ட்டின் மேரி அபிசாவின் வீட்டிற்கு சென்று, தனது குழந்தையை தருமாறு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

கன்னியாகுமரி,

மனைவியின் தலையில் கத்தியால் குத்திய கணவனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கத்திக்குத்து

கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் மேரி அபிசா( வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த அனிஷ் மார்ட்டின் ( வயது 30) என்பவரை 7 வருடங்களாக காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். பின்னர், அனிஷ் மார்ட்டின் மனைவியிடம் கூடுதல் வரதட்சனை கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார். குழந்தை பிறந்த பின்னரும் வீட்டில் இருந்து பணம் வாங்கி வர வேண்டும் எனக் கூறி கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் மேரி அபிசா 2024-ம் ஆண்டு அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர், கணவர் அனிஷ் மார்ட்டினுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக நேற்று நீதிமன்றத்திற்கு மேரி அபிசாவும் அனிஷ் மார்ட்டினும் வந்துள்ளனர். பின்னர், மேரி அபிசா வழக்கு முடிந்ததும் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், அனிஷ் மார்ட்டின் மேரி அபிசாவின் வீட்டிற்கு சென்று, தனது குழந்தையை தருமாறு தகராறில் ஈடுபட்டுள்ளார். குழந்தையை தர மறுத்ததால் அனிஷ் மார்ட்டின் மறைத்து வைத்திருந்த கத்தியால் மேரி அபிசாவை தலையில் குத்தினார்.

இதனை தடுக்க முயன்ற அவரது தாய் அக்கா மற்றும் தம்பியை தாக்கி அனிஷ் மார்ட்டின் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பின்னர், சிகிச்சைக்காக 4 பேரும் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மேரி அபிசா கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அனிஷ் மார்ட்டினை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT