தமிழக செய்திகள்

கடலூரில் சோகம்: டிராக்டர் மீது மினி லாரி மோதி விபத்து - 4 பேர் பலி

விபத்தில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்கள் 12 பேர் இன்று காலை நாட்டு நடும் பணிக்காக மினி லாரியில் சென்றுகொண்டிருந்தனர்.

4 பேர் பலி

பண்ருட்டி அருகே காடாம்புலியூர் சாலையில் சென்றபோது எதிரே வந்த டிராக்டர் மீது மினி லாரி மோதியது. இந்த கோர விபத்தில் நடவு பணிக்காக சென்ற 3 பெண்கள் உள்பட 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.