தமிழக செய்திகள்

'அர்னாப்' புயல் எதிரொலி: காக்கிநாடா துறைமுகம்-செங்கல்பட்டு சர்கார் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து!

பயணிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு சில ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

'அர்னாப்' புயல் காரணமாக சர்கார் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரெயில்

'அர்னாப்' புயல் காரணமாக பயணிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு சில ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் சர்கார் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.17644), ரத்து செய்யப்படுகிறது.

* ஆந்திர மாநிலம் நரசாபூரில் இருந்து இன்று அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி வரும் சிறப்பு ரெயில் (06020), அதற்கு மாற்றாக காலை 7 மணிக்கு (3 மணி நேரம் தாமதம்) புறப்பட்டு தூத்துக்குடி வரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT