தமிழக செய்திகள்

9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

மேலும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை,

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் 'அக்வான்' புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

அக்வான் புயல்

இந்த புயல் 24-36 மணி நேரத்திற்கு வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, பின்னர் நவம்பர் 16 மற்றும் 17-ம் தேதிகளில் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலை கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது நவம்பர் 19-ம் தேதி இரவு அல்லது 20-ம் தேதி அதிகாலையில் எண்ணூர் - கடலூர் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வடதமிழகக் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

இதன் காரணமாக சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT