தமிழக செய்திகள்

சிலிண்டர் விலையேற்றம்: சுமையை குறைக்க அமைய உள்ள அரசு மானியத்தை அறிவிக்க வேண்டும் - வேல்முருகன்

இந்தியாவில் மக்களின் அத்தியாவிசிய தேவைகள் விலை ஏற்றிய பின் அவை தானாக குறைந்ததில்லை என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

வணிக சமையல் எரிவாயு விலையேற்ற சுமையை குறைக்க அமைய உள்ள அரசு மானியத்தை அறிவிக்கவேண்டும் ;தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தல்.

இந்தியாவில் வணிக 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மே 1 ம் தேதி முதல் சுமார் ரூ.993 உயர்ந்துள்ளது. இதுவே தொழிலாளர் தினத்தில் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் வெகுமதியாகும். மக்களவை தேர்தல்வரை ஆட்சியார்களுக்கு தமிழக வாக்காளர்களின் தயவு தேவையில்லை

என்று ஆளும் மத்திய அரசு முடிவெடுத்திருப்பது வெட்ட வெளிச்சமாகிறது.

இது மார்ச் மற்றும் ஏப்ரல் மாத தொடர் உயர்வாகும். வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை, அமெரிக்கா-ஈரான்-இஸ்ரேல் மோதல் காரணமாக ஹார்முஸ் நீரிணை போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், மேற்கு ஆசியா (West Asia) போர் & ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பாதிப்பினாலும்,

இந்தியா எல்பிஜி இறக்குமதியில் 90% ஹார்முஸ் வழியாக வருகிறது. இது உலகளாவிய எல்பிஜி விநியோகம் தடை செய்யப்படுவதாலும் மற்றும் விலை உயர்வுக்கு வழிவகுத்தது.

இந்தியா உலகின் 2வது பெரிய எல்பிஜி இறக்குமதியாளராகும். இதனால் சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. போர் எல்பிஜி உற்பத்தி மற்றும் இறக்குமதி செலவு நேரடியாக பாதிக்கப்பட்டது.

சவுதி அராம்கோ போன்ற நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ விலை (Official Selling Price) உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு பலவீனமடைந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் (IOCL, BPCL, HPCL) மாதந்தோறும் சர்வதேச பெஞ்ச்மார்க் & மாற்று விகிதத்தின் அடிப்படையில் விலையை திருத்துகின்றன. உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கப்பட்டாலும் இறக்குமதி அதிகமாகவே உள்ளது.

வணிக எல்பிஜி (ஹோட்டல், உணவகங்கள்) மொத்த நுகர்வில் சிறிய பங்கு என்பதால், வீட்டு உபயோகத்தை பாதுகாக்க இந்த பிரிவில் முழு உயர்வு ஏற்றப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் ரூ. 144ம் , ஏப்ரல் மாதம் ரூ. 200ம் , தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு பின் இம்மாதம்

ரூ993 உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் அரசு மானியம் மற்றும் அரசியலுக்காக நேரடி உயர்வை தவிர்த்தது. வணிக பயன்பாட்டில் மட்டும் சந்தை விலைக்கு நெருக்கமாக கொண்டு வரப்பட்டது. சூழ்நிலை சீரடைந்தால் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

இந்தியாவில் மக்களின் அத்தியாவிசிய தேவைகள் விலை ஏற்றிய பின் அவை தானாக குறைந்ததில்லை. மாநில அரசின் மானியம் சாமான்ய மக்களின் வாழ்க்கை சுமையை குறைக்கலாம்.

இதனால் சொந்த மண்ணைவிட்டு குடும்பத்திற்காக தியாகங்கள் செய்து உணவு விடுதிகளில் சாப்பிட்டு, பெற்றோருக்கு அனுப்பும் பணத்தில் துண்டு விழும். ஆளும் பாஜக அரசு பக்கோடா விற்று பிழைக்கலாம் என குதுகலிக்கும். அமைய உள்ள தமிழக அரசு பதவி ஏற்றதும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை சாமான்ய மக்கள் ஏற்கும் வகையில் மானியத்தை அறிவிக்க முதல் கையெழுத்தை போடுமாறு வலியிறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.