சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி நடைபெற உள்ளது. டாக்டர் ராமதாஸ், சசிகலா புதிதாக தொடங்கிய அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து வருகிற சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளார். அன்புமணி ராமதாசுக்குதான் பா.ம.க.வின் பெயரை பயன்படுத்தவும், மாம்பழம் சின்னத்தை ஒதுக்கவும் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ராமதாஸ் கடந்த மாதம் அய்யா பாமக எனும் புது கட்சியை தொடங்கினார். ராமதாஸ் தரப்பில் சட்டசபை தேர்தலில் 30 தொகுதிகளில் தனது ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இவர்கள் அனைவருக்கும் தேர்தல் ஆணையம் சிலிண்டர் சின்னம் ஒதுக்கியுள்ளது. அய்யா பாமகவின் 30 வேட்பாளர்களுக்கும் சிலிண்டர் சின்னத்தில் வாக்களிக்குமாறு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.