தமிழக செய்திகள்

தமிழகத்தில் இருந்து வியட்நாமுக்கு தினசரி இணைப்பு விமான சேவை - இண்டிகோ அறிவிப்பு

பெங்களூரு வழியாக, வியட்நாம் தலைநகர் ஹனாய்க்கு, தினசரி இணைப்பு விமான சேவையை, ‘இண்டிகோ’ அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இருந்து, தென் கிழக்கு ஆசிய நாடான வியட்நாம் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள், தற்போது பிற வெளிநாட்டு விமான நிறுவனங்களை நாட வேண்டிய நிலை உள்ளது.

இண்டிகோ அறிவிப்பு

இந்நிலையில், பயணியரின் வசதிக்காக சென்னை, கோவை, மதுரை, திருச்சியில் இருந்து, பெங்களூரு வழியாக, வியட்நாம் தலைநகர் ஹனாய்க்கு, தினசரி இணைப்பு விமான சேவையை, ‘இண்டிகோ’ அறிவித்துள்ளது.

விமானங்கள் இயக்கம்

பயண நேரம் மற்றும் முன்பதிவு தொடர்பான விவரங்களை ‘goindigo.in’ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். சென்னையில் இருந்து, தினசரி இரவு 8:45 மணி; கோவையில் இருந்து மாலை 4:35; மதுரையில் இருந்து பிற்பகல் 3:35; திருச்சியில் இருந்து காலை 8:30 மணிக்கு, விமானங்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT