தமிழக செய்திகள்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல்மின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் அலகில் ஆண்டு பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று காலையில் 2-வது அலகில் கொதிகலன் குழாயில் கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு அலகுகளில் தலா 210 வீதம் 420 மெகாவாட் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பழுது சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT