கோப்பு படம் 
தமிழக செய்திகள்

தசரா திருவிழா ; குலசேகரன்பட்டினத்தில் 1,000 போலீசார் பாதுகாப்பு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இன்று தசரா திருவிழா கொடியேற் றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 20-ந்தேதி இரவில்நடைபெற உள்ளது. இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் தலைமையில், 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில், உதவி போலீஸ் சூப்பிரண்டு, 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 32 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 1000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்காணிப்பு

மேலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், சாதாரண உடையில் 50 போலீசார் பொதுமக்களுடன் கலந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் முக்கிய இடங்களில் சுமார் 80 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் தேவையான அனைத்து பாது காப்பு ஏற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டு உள்ளனர். மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது சட்டப் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தூத்துக்குடி மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது

SCROLL FOR NEXT