தமிழக செய்திகள்

‘நீட்' தேர்வில் சாதனை படைத்த மாடு மேய்க்கும் தொழிலாளியின் மகள்

கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்தார்.

ஆலங்குடி,

ஆலங்குடி தாலுகா கீரமங்கலம் வடக்கு குமரன் சாலையில் வசித்து வருபவர் தமிழரசன். இவர் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களது மகள் பிரியதர்ஷினி (வயது 20). இவர் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்தார். பின்னர் 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்று டாக்டராக வேண்டும் என்கிற கனவோடு 'நீட்' தேர்வுக்கு தயாராகி வந்தார்.

7.5 சதவீத இட ஒதுக்கீடு

இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் 21-ந்தேதி 'நீட்' மறு தேர்வை பிரியதர்ஷினி எழுதினார். இதில் 502 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் பிரியதர்ஷினி 7.5 சதவீத இட ஒதுக்கீடு கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பாணை இன்னும் வரவில்லை என்றும், வந்ததும் அதில் கலந்து கொள்வதாக தெரிவித்தார்.

SCROLL FOR NEXT