தமிழக செய்திகள்

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்குக் கெடு: அக்.31-க்குள் சொத்து, கடன் விவரங்களை இணையத்தில் தாக்கல் செய்ய உத்தரவு

அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு

சென்னை, செப்.12 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் தங்களின் சொத்து மற்றும் கடன் விவரங்களை வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தின் தொடர்ச்சியாக, இந்த விவரங்களை தாக்கல் செய் வதற்கான காலக்கெடு மற்றும் நடைமுறைகள் தற்போது முறைப் படி அறிவிக்கப்பட்டுள்ளன.

2025-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி அரசு ஊழியர்களிடம் உள்ள சொத்து மற்றும் கடன் விவரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படும். சொத்து விவரங்களை அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது காகித வடிவிலோ வழங்க வேண்டிய அவசிய மில்லை. தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு (IFHRMS) இணையதளம் வழியாகவே முழுமையாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

சொந்தப் பெயரில் அல்லது குடும்பத்தினர் பெயரில் உள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட விவரங்கள். நகைகள், வாகனங்கள், வங்கியில் உள்ள வைப்புத் தொகை மற்றும் பிற முதலீடுகள்.

அரசு ஊழியர்கள் பெற்றுள்ள அனைத்து விதமான கடன் தொடர்பான தகவல்களையும் தவறாமல் குறிப்பிட வேண் டும் அரசு நிர்வாகத்தில் வெளிப் படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT