தமிழக செய்திகள்

காவேரிப்பட்டணம் அருகேடிப்பர் லாரி மோதி முதியவர் பலி

காவேரிப்பட்டினம்:

கிருஷ்ணகிரி அருகே உள்ள மூங்கில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாம்ராஜ் (வயது 54). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது சப்பானிப்பட்டி அருகே எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதியது. இந்த விபத்தில் சாம்ராஜ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாம்ராஜ் இறந்தார். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT