சாந்தி, பிரேமலதா விஜயகாந்த் 
தமிழக செய்திகள்

சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி மறைவு: பிரேமலதா விஜயகாந்த் இரங்கல்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடைய மூத்த மகள் சாந்தி பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி மறைவிற்கு பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;-

வருத்தம்

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகளும், திரைப்பட தயாரிப்பாளருமான சாந்தி நாராயணசாமி (71) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் வருத்தமும் அடைந்தேன்.

இனிமையானவர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடைய மூத்த மகள் சாந்தி பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். அவரது மறைவு குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அவரை நேசித்த அனைவருக்கும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆழ்ந்த இரங்கல்

அன்பு சகோதரி சாந்தி நாராயணசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆன்மா சாந்தியடையவும், இந்தப் பேரிழப்பைத் தாங்கும் மனவலிமையை அவரது குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல இறைவன் வழங்கிடவும் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT