தமிழக முதல்-அமைச்சர் விஜய் நாளை காலை திருச்சி செல்ல திட்டமிட்டு இருந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக வேனில் திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள அண்ணல் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று, மருத்துவமனை வளாகத்தில் நவீன வசதிகளுடன் ரூ.134 கோடி திட்ட மதிப்பீட்டில் 6 தளங்களாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை திறந்து வைக்க திட்டமிட்டு இருந்தார்.
விஜய் ரோடு ஷோவாக செல்லவும் திட்டமிட்டு இருந்தார். சுமார் 16 கி.மீ. தூரத்திற்கு பிரமாண்ட 'ரோடுஷோ' செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில் விஜய்யின் திருச்சி பயணம் ரத்து ஆகியுள்ளது. கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ விஎஸ் பாபு மறைவு காரணமாக தனது திருச்சி பயணத்தை விஜய் ரத்து செய்து இருப்பதாக தெரிகிறது.
கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ விஎஸ் பாபு இன்று காலமானார். கடந்த 72 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாரடைப்பு ஏற்பட்டு விஎஸ் பாபு உயிரிழந்தார். விஎஸ் பாபு மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.