தமிழக செய்திகள்

வாலிபருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது

போடியில் வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

போடி கீழத்தெருவை சேர்ந்தவர் பாரதி (வயது 30). இவர், போடி இரட்டை வாய்க்கால் அருகே உள்ள தனியார் மதுபான பாரில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை இவர், மதுபான பாரை திறந்தபோது அங்கு வந்த 2 பேர் தகாத வார்த்தைகளால் பேசினர். இதனை அவர் தட்டி கேட்டார். அப்போது அவர்கள் ஏன் பாரை ஏன் கால தாமதமாக திறக்கிறாய் என்று கூறி அவரை தாக்கினர். இதையடுத்து அவர்களை அங்கிருந்தவர்கள் விலக்கி விட்டனர்.

ஆனால் 2 பேரும் அங்கிருந்த காலி பீர் பாட்டில்களை எடுத்து உடைத்து பாரதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாரதி, போடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பாரதிக்கு கொலை மிரட்டல் விடுத்தது போடி கீழத்தெருவை சேர்ந்த மருதுபாண்டி, புதூரைச் சேர்ந்த முருகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT