தமிழக செய்திகள்

தொடரும் உயிரிழப்புகள்: வெள்ளியங்கிரி மலையேறிய பக்தருக்கு நேர்ந்த சோகம்

வெள்ளியங்கிரி மலையேற ஆண்டின் கூறிப்பிட்ட மாதங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழக்கப்பட்டு வருகிறது.

கோவை,

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஒட்டி உள்ள 7வது மலையில் சிவபெருமான் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார்.

மலையில் உள்ள சிவலிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டின் கூறிப்பிட்ட மாதங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழக்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டியில் வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி 7வது மலையில் உள்ள சிவபெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். கடினமான மலைகளில் ஏறும்போது சில பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், வெள்ளியங்கிரி மலை ஏறிய டாக்சி ஓட்டுநர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த துயரம் நிகழ்ந்துள்ளது. கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த மயில்சாமி (32) என்பவர் இன்று அதிகாலை, வெள்ளியங்கிரியில் உள்ள நான்காவது மலைப்பாதையில் செல்லும் போது உயிரிழந்தார். அவருக்கு ஏற்கனவே இதயபாதிப்பு இருந்ததும், குடும்பத்தினர் எச்சரிக்கையை மீறி மலையேறியதும் தற்போது தெரியவந்துள்ளது.