விருதுநகர்,
விருதுநகர் அருகே சூலக்கரை ரெயில்வே கேட் பகுதியில் கடன் தொல்லை காரணமாக, ரெயில்முன் பாய்ந்து இளம்பெண் மற்றும் அவரது 10 வயது மகன் தற்கொலை செய்து கொண்டனர்.
விருதுநகர் அருகே சூலக்கரை ரெயில்வே கேட் பகுதியில், கடன் தொல்லை காரணமாக பாண்டிச்செல்வி (வயது 30) என்பவர், தனது 10 வயது மகன் பிரதீப்புடன் திருவனந்தபுரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த அம்ரித் பாரத் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் தனது கணவருக்கு வீடியோ அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபற்றி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.