நெல்லை,
அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழாவையொட்டி நெல்லை மண்டலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 22-ந் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் மற்றும் தீபத்திருவிழா வருகிற 24-ந் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், நெல்லை கோட்டத்தின் சார்பாக வருகிற 22 மற்றும் 23-ந் தேதிகளில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் மற்றும் நாகர்கோவில் போன்ற முக்கிய பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கும், 24 மற்றும் 25-ந் தேதிகளில் திருவண்ணாமலையிலிருந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் மற்றும் நாகர்கோவில் போன்ற முக்கிய பகுதிகளுக்கும் 150 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலுக்கு குழுவாக செல்லும் பக்தர்களின் நலன் கருதி மொத்தமாக ஒரு அரசு பஸ்சில் பயணிக்கும் வகையில் 'On Contract' அடிப்படையில் வழங்கப்படும். நெல்லை மண்டலத்தில் நெல்லை மாவட்ட உதவி மேலாளர் (வணிகம், 9487599053), உதவி பொறியாளர் (இயக்கம், 9489052016), தென்காசி மாவட்டம் உதவி மேலாளர் (வணிகம் 9487599053), உதவி பொறியாளர் (இயக்கம், 9489052016) என்ற விவரங்களில் தொடர்புகொள்ளலாம்.
தூத்துக்குடி மண்டலத்தில் தூத்துக்குடி மாவட்ட உதவி மேலாளர் (வணிகம், 9489052015), கிளை மேலாளர் (தூத்துக்குடி புறநகர் கிளை, 9487599063) கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை நாகர்கோவில் மண்டல உதவி மேலாளர் (வணிகம், 9487599082), உதவி பொறி யாளர் (இயக்கம், 9487599083) என்ற விவரங்களில் தொடர்புகொள்ளலாம்.
இத்தகவலை மண்டல இயக்குனர் தெரிவித்துள்ளார்.