கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்-ஈரோடு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பசுபதி செந்தில். இவர் ஈரோடு மண்டல அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு துணைத்தலைவராக உள்ளார்.
இவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுபதி செந்திலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.