தமிழக செய்திகள்

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறால் மின்சார ரெயில் சேவையில் தாமதம்

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறால் மின்சார ரெயில் சேவையில் தாமதம் இயக்கப்பட்டன.

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் மார்க்கமாக செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருமால்பூர் பகுதிகளுக்கு மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று காலை கடற்கரை ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாம்பரம் வழித்தடத்தில் சிக்னல்கள் சரிவர இயங்கவில்லை.

இதன் காரணமாக கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த ரெயில்கள் மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டன. இதேபோல் கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயில்களும் தாமதமானது. இதனால் பயணிகள் ரெயிலுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து மணி நேரத்துக்கு பிறகு கோளாறுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் ரெயில்கள் இயக்கப்பட்டன.

சிக்னல் இயங்காததால் தாம்பரம் வழித்தட மின்சார ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டாலும், கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி செல்லும் மின்சார ரெயில்கள் பாதிப்பின்றி தொடர்ந்து இயக்கப்பட்டன.

SCROLL FOR NEXT