தமிழக செய்திகள்

சென்னையில் டெலிவரி ஊழியருக்கு கத்திக்குத்து - சிறுவன் உள்பட 6 பேர் கைது

படுகாயமடைந்த டெலிவரி ஊழியர் பவன்குமார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை,

சென்னை மஞ்சம்பாக்கத்தை சேர்ந்த டெலிவரி ஊழியர் பவன்குமார், கடந்த 7-ந்தேதி கதிர்வேடு பகுதி அருகே சாலையில் கொண்டிருந்தபோது 3 இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல், பவன்குமார் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பவன்குமார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து புழல் போலீசார் நடத்திய விசாரணையில், பவன்குமாரின் சகோதரருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி, டெலிவரி ஊழியர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சிறுவன் உள்பட 6 பேரை அதிரடியாக கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சிறுவன் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT