தமிழக செய்திகள்

சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருத்தணியில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருத்தணி,

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் திருத்தணி ஒன்றிய தலைவர் உஷாராணி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் மணிகண்டன் கலந்துக்கொண்டார்.

ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடை முறைப்படுத்த வேண்டும் ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு லட்சம் பணிக்கொடையை 5 லட்சமாக உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என கோஷமிட்டனர். பின்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபுவிடம் மனுவாக அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்