ராமநாதபுரம்,
டெங்கு எண்ணிக்கை உயர்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஒரு நாளுக்கு பரிசோதனை செய்யப்படுவதில் 10-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு உறுதிசெய்யப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் ராமநாதபுரம் அரசு கல்லூரி மருத்துவமனையில் டெங்கு நோயாளிகளுக்கு என தனி வார்டு அமைக்கப்படாததால், சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுடன் டெங்கு பாதிக்கப்பட்டவர்களும் அனுமதிக்கப்படுவதாக நோயாளிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.