சென்னை,
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் என்பது வழக்கத்திற்கு மாறானதாகவோ அல்லது அபாயகரமான அளவிலோ இல்லை. ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்காலத்தில் தட்பவெப்பநிலை மாற்றங்களின் காரணமாக டெங்கு பாதிப்புகளில் பருவகால மாறுபாடு ஏற்படுவது இயல்பானதாகும்.
கடந்த 3 ஆண்டுகளில் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 2024-ம் ஆண்டில் மொத்தம் 34,339 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 13 உயிரிழப்புகளும், 2025-ம் ஆண்டில் 15,688 பேர் பாதிக்கப்பட்டு, 13 உயிரிழப்புகளும், இந்த ஆண்டில் செப் டம்பர் 16-ந் தேதி வரையிலான நிலவரப்படி, 16,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
9 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.காய்ச்சல் பாதிப்புகளைக் கண்காணித்து, தேவையான மருத்துவச் சிகிச்சையை விரைவாக வழங்கும் வகையில் காய்ச்சல் வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.