தமிழக செய்திகள்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் பனி மூட்டம்

அர்னாப் புயல் நாளை கரையை கடக்கிறது.

சென்னை,

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவியது.

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்தநிலையில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட் டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே பகுதிகளில் நிலவியது.

இது நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் மேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு 'அர்னாப்' என பெயரிடப்பட்டு உள்ளது. மேலும் புயல் இன்று (செவ்வாய்க்கிழமை) மிக தீவிரபுயலாக அதே பகுதிகளில் வலுப்பெறக்கூடும்.

லேசான மழை

இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (புதன்கிழமை) முற்பகலில் ஆந்திரா மற்றும் ஏனாம் கடற்கரை பகுதிகளில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டி னம் இடையே ஏனாம் பகுதிகளுக்கு அருகில் மிக தீவிர புய லாக கரையை கடக்கக்கூடும். அப்போது காற்றின் வேகம் 115 முதல் 125 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 140 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

பனி மூட்டம்

இந்த நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை வேளையில் கடும் பனி மூட்டம் நிலவியது. சென்னை, செங்கல்பட்டு. மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், கோவை, திருச்சி, அரியலூர், சிவகங்கை, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் கடும் பனி மூட்டம் காணப்பட்டது. காலை 8 மணி வரை பனிமூட்டம் நீடித்தது.

திருச்சி காவேரி பாலம் பகுதியில் பனி மூட்டத்தால் வெள்ளை நிறப் புகை போன்ற சூழல் காணப்பட்டது. ஸ்ரீரங்கம் கோவில், தஞ்சை பெரிய கோவில்கள் பனி மூட்டத்தால் மூடப்பட்டன. சாலைகளில் பனி மூட்டம் சூழ்ந்துள்ளதால்வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றதை காணமுடிந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், இன்று பனிமூட்டம் நிலவியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT