சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் த. சரத்குமாரின் தலைமையில் இன்று 22.05.2026 தலைமைச் செயலகத்தில் மனித வள மேலாண்மைத் துறை சார்ந்த அரசின் திட்டங்கள் குறித்து துறையின் உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர், துறையைப் பற்றியும், துறையின் தலைமையகங்களின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கி கூறினார்கள்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பிட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு பயிற்சி மையங்கள் மூலம் போட்டித்தேர்வுகளுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டுமென்றும், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்து உடனுக்குடன் தீர்வு காண வேண்டுமென்றும், அரசு அலுவலகங்களில் ஊழலற்ற மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் அறிவுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மனித வள மேலாண்மைத் துறையின், முதன்மைச் செயலாளர் சி. சமயமூர்த்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி, இயக்குநர் / பயிற்சி துறைத் தலைவர் எஸ். கோபால சுந்தர ராஜ், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் (பொ) துரைக்குமார், பிற துறைத் தலைவர்கள் மற்றும் இத்துறையின் உயர் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.