சென்னை,
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து, 9 பேர் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கான துறைகளும் சமீபத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பிடித்தவர்கள் இன்று முறைப்படி அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்தவரான செங்கோட்டையன், விஜய் முன்னிலையில் நிதியமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், ராஜ்மோகன், அருண்ராஜ் உள்ளிட்ட அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்தநிலையில், முதல்-அமைச்சர் விஜய்யின் 4 தனி செயலாளர்களுக்கும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
செந்தில்குமார்
நிதி, உள்துறை, மதுவிலக்கு, நகராட்சி நிர்வாகம், தொழில்கள்,கலால்,பொது, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வியோகம், எரிசக்தி, தொழில், முதலீட்டு மேம்பாடு, வணிகத்துறை, நெடுஞ்சாலை, மக்கள் நல்வாழ்வுத்துறை. விஜிலென்ஸ் கமிஷன்,பொதுப்பணித்துறை, சிறு துறைமுகங்கள், குடும்ப நலம்,
லட்சுமி பிரியா
முதல்-அமைச்சர் அலுவலக நிர்வாகம், பள்ளிக்கல்வி, உயர்க்கல்வி, வருவாய்த்துறை, நகர்புற, கிராமப்புற வளர்ச்சித்துறை, பஞ்சாயத்துறை, சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோர் நலத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாற்று திறனாளிகள் மறுவாழ்வு, வீட்டு வசதி, சமூக நலன், மகளிர் மேம்பாடு, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நலன்,
அண்ணாதுரை
இயற்கைவளம், நீர்வளம்,விவசாயிகள் நலம், போக்குவரத்து, தமிழ் வளர்ச்சி, சட்டத்துறை, வணிகவரி, இயற்கை வளம், நீர்வளம், வேளாண்மை, கால்நடை,மீன்வளம், கூட்டுறவு, உணவுத்துறை, கைத்தறி, ஜவுளி, காதி, சட்டசபை அலுவலகம், மனிதவளத்துறை, தமிழ் வளர்ச்சித்துறை , போக்குவரத்து, சட்டம், மனிதவள மேம்பாடு,
விஷ்ணு
சுற்றுலாத்துறை, வணிக வரி, பத்திரப்பதிவு துறை, இளைஞர் நலன், சிறப்பு திட்டங்கள் அமலாக்கம், சுற்றுலா, கலாசாரம், சிறு, குறு, நடுத்தர தொழில், தகவல் தொழில்நுட்பம், இளைஞர் நலம், விளையாட்டு, தொழிலாளர் நலம், திட்டம், சிறப்பு திட்ட அமலாக்கம், ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.