தமிழக செய்திகள்

‘60 ஆண்டுகள் தி.மு.க. கூட்டணியில் இருந்தும் ஐ.யூ.எம்.எல். கட்சிக்கு அமைச்சரவையில் இடம் தரவில்லை’ - சையத் பாரூக் பாஷா எம்.எல்.ஏ.

ஐ.யூ.எம்.எல். கட்சி இன்று ஆட்சியிலும் பங்கெடுத்து, அதிகாரத்திலும் பங்கெடுத்திருக்கிறது என சையத் பாரூக் பாஷா தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) கட்சி எம்.எல்.ஏ. சையத் பாரூக் பாஷா பேசியதாவது;-

“தி.மு.க. கூட்டணியில் 60 ஆண்டுகள் இருந்தும் அமைச்சரவையில் ஐ.யூ.எம்.எல். கட்சிக்கு இடம் தரவில்லை. சட்டமன்ற தேர்தலில் எங்கள் தனி சின்னமான ஏணி சின்னத்தில் நின்று 2 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றோம்.

இன்று இந்தியாவே பாராட்டக்கூடிய வகையில், தமிழகத்தில் ஆட்சி அமைவதற்கு காரணமாக ஐ.யூ.எம்.எல். கட்சி இருந்திருக்கிறது. ஆட்சியிலும் பங்கெடுத்து, அதிகாரத்திலும் பங்கெடுத்திருக்கிறோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT