தமிழக செய்திகள்

1200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 1200 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

கச்சிராயப்பாளையம், 

கல்வராயன்மலையில் உள்ள நடுமத்தூர் பெரியாற்று பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் கரியாலூர் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு பேரல்களில் சாராயம் காய்ச்சுவதற்காக 1200 லிட்டர் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து அதனை போலீசார் கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர்.

SCROLL FOR NEXT