தமிழக செய்திகள்

வருகிற 7-ந்தேதி முதல் மதுரை ஐகோர்ட்டில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் விவரம்

மதுரை ஐகோர்ட்டில் வருகிற 7-ந்தேதி முதல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

மதுரை,

அதன் விவரம் வருமாறு:-

முதலாவது டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆனந்தி ஆகியோர் பொது நல வழக்குகள் மற்றும் டிவிஷன் பெஞ்ச் விசாரணையில் உள்ள ரிட் மனுக்கள், 2018-ம் ஆண்டில் இருந்து நிலுவையில் உள்ள ரிட் அப்பீல் மனுக்கள், கிரிமினல் அவமதிப்பு வழக்குகள், அவமதிப்பு நடவடிக்கை தொடர்பான அப்பீல் மனுக்கள் ஆகியவற்றை விசாரிக்கின்றனர்.

இதேபோல 2-வது டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் டி.ராஜா, புகழேந்தி ஆகியோர் ஆட்கொணர்வு மனுக்கள், அனைத்து கிரிமினல் அப்பீல் மனுக்கள் மற்றும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான கிரிமினல் வழக்குகள், 2017-ம் ஆண்டு வரை தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள ரிட் அப்பீல் மனுக்கள், சிவில் அப்பீல் வழக்குகளை விசாரிக்கின்றனர்.

நீதிபதி வி.எம்.வேலுமணி, தொழிலாளர் மற்றும் சேவை தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு முதல் தாக்கலாகி நிலுவையில் உள்ள ரிட் மனுக்கள், சுதந்திர போராட்ட தியாகி பென்சன் திட்ட மனுக்கள் ஆகியவற்றை விசாரிக்கின்றார்.

நீதிபதி நிஷாபானு, மோட்டார் வாகனங்கள், மோட்டார் வாகன வரி, அனைத்து வரி மற்றும் கலால், சுங்கம் மற்றும் இறக்குமதி, மத்திய, மாநில வரி, கனிமம் மற்றும் சுரங்கம், காடுகள் மற்றும் தொழில்துறை சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கிறார்.

இதேபோல கடந்த 2014-ம் ஆண்டு வரை தாக்கலாகி நிலுவையில் உள்ள முதல் நிலை அப்பீல் மற்றும் 2-ம் நிலை அப்பீல் மனுக்களை ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்கிறார்.

கடந்த 2017-ம் ஆண்டு வரை தாக்கலாகி நிலுவையில் உள்ள தொழிலாளர் மற்றும் சேவை தொடர்பான ரிட் மனுக்களை நீதிபதி ஆதிகேசவலு விசாரிக்கிறார்.

நீதிபதி தாரணி, 2018-ம் ஆண்டு வரை தாக்கலாகி நிலுவையில் உள்ள சிவில் சிறு அப்பீல் மனுக்கள், 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை தாக்கலாகி நிலுவையில் உள்ள சிவில் ரிவிஷன் மனுக்கள் ஆகியவற்றை விசாரிக்கிறார்.

நீதிபதி கிருஷ்ணவள்ளி, கிரிமினல் அப்பீல் மனுக்கள் (பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான அப்பீல் உள்பட) 2018-ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள கிரிமினல் ரிவிஷன் மனுக்கள் ஆகியவற்றை விசாரிக்கிறார்.

நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ், பொது சிறு வழக்குகள், கல்வி, நிலச்சீர்திருத்தம், நில குத்தகை, நிலம் கையகப்படுத்துதல், நிலச்சட்டங்கள் போன்றவை தொடர்பான ரிட் மனுக்கள், வேறு தனிநீதிபதிக்கு குறிப்பிட்டு ஒதுக்கப்படாத ரிட் மனுக்கள் ஆகியவற்றை விசாரிக்கிறார்.

சி.பி.ஐ., லஞ்ச ஒழிப்பு

நீதிபதி சந்திரசேகரன், முன்ஜாமீன், ஜாமீன் மனுக்கள், முன்ஜாமீன், ஜாமீன் மனுக்கள் மீதான நிபந்தனை தளர்வு, அவற்றில் திருத்தம் செய்வது, தள்ளுபடி செய்வது உள்ளிட்ட அனைத்து மனுக்கள், குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 407, 482 ஆகிய பிரிவுகளின் கீழ் தாக்கல் செய்யப்படும் கிரிமினல் ஒரிஜினல் மனுக்கள், 2017-ம் ஆண்டு வரை தாக்கலாகி நிலுவையில் உள்ள ரிட் மனுக்கள் (குற்றவியல் நடைமுறைச்சட்டம் தொடர்பானவை) ஆகியவற்றை விசாரிக்கிறார்.

நீதிபதி நக்கீரன், 2015-ம் ஆண்டு முதல் தாக்கலாகியுள்ள 2-ம் நிலை அப்பீல் மனுக்கள், சிவில் சிறு வழக்குகளின் 2-ம் நிலை அப்பீல் மனுக்கள், கம்பெனி அப்பீல் மனுக்கள், 2014-ம் ஆண்டு வரை தாக்கலாகியுள்ள சிவில் ரிவிஷன் மனுக்கள் ஆகியவற்றை விசாரிக்கிறார்.

நீதிபதி இளங்கோவன், குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 407, 482 ஆகிய பிரிவுகளின்கீழ் 2018-ம் ஆண்டு முதல் தாக்கலாகி நிலுவையில் உள்ள கிரிமினல் ஒரிஜினல் மனுக்கள் ஆகியவற்றை விசாரிக்கிறார்.

நீதிபதி சத்திகுமார், 2017-ம் ஆண்டு வரை தாக்கலாகியுள்ள கிரிமினல் அப்பீல் மனுக்கள் (பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பானவை உள்பட) சி.பி.ஐ., லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகள் (ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களை தவிர) ஆகியவற்றை விசாரிக்கிறார்.

நீதிபதி முரளிசங்கர், 2019-ம் ஆண்டு முதல் தாக்கலாகியுள்ள சிவில் சிறு அப்பீல் வழக்குகள், சிவில் ரிவிஷன் மனுக்கள் ஆகியவற்றை விசாரிக்கிறார்.

மேற்கண்ட தகவலை சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் (நீதித்துறை) வெளியிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT