தமிழக செய்திகள்

திராவிட மாடல் அரசின் திட்டங்களால் ஒவ்வொரு வீட்டிலும் வளர்ச்சி: உதயநிதி ஸ்டாலின்

மக்கள் முகங்களில் தவழும் புன்னகையே திராவிட மாடல் அரசின் வெற்றி என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

செல்லும் இடமெல்லாம், மக்கள் காட்டும் அன்பு - வரவேற்பு, அவர்களின் முகங்களில் தவழும் புன்னகையே 5 ஆண்டுக்கால திராவிடமாடல் அரசின் திட்டங்களுக்கான வெற்றி.

`விடியல் பயணம்’, `மகளிர் உரிமைத்தொகை’, `புதுமைப்பெண்’, `தமிழ்ப்புதல்வன்’, `நான் முதல்வன், `காலை உணவுத்திட்டம்’... என இந்தியாவே பின்பற்றும், திராவிட மாடல் அரசின் திட்டங்கள், தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் வளர்ச்சியைக் கொண்டுசேர்த்திருக்கின்றன.

மக்களின் பேராதரவுடன் மீண்டும் கழகத் தலைவர் முதல்-அமைச்சர்

மு.க.ஸ்டாலின் அவர்களே வெல்வார். தமிழ்நாட்டைத் தலைநிமிர்த்திய சாதனைத்திட்டங்கள் 2026-லும் தொடரும். என தெரிவித்துள்ளார்.