துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன் 
தமிழக செய்திகள்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள்: வட்டார துணை ஆணையாளர்கள் ஆய்வு

மார்டன் ஸ்கூல் சாலையில் புதிய விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பாகவும் பார்வையிட்டு துணை ஆணையாளர் ஆய்வு செய்தார்.

சென்னை,

சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை வட்டார துணை ஆணையாளர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது தொடர்பாக, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

ஆய்வு

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன், மத்திய வட்டார துணை ஆணையாளர் கௌஷிக், நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை இன்று (04.11.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

வடகிழக்கு பருவமழை

வடக்கு வட்டார துணை ஆணையாளர், சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், வார்டு-25க்குட்பட்ட சி.எம்.டி.ஏ. டிரக் டர்மினல் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் விளையாட்டு மைதானத்தின் பணி, வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மணலி மண்டலம், வார்டு-18க்குட்பட்ட 200 அடி சாலையில் உள்ள கண்காணிப்பு அறை, நெடுஞ்செழியன் நகர் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பாகவும், வார்டு-22க்குட்பட்ட சின்னசேக்காடு அமைக்கப்பட்டு வரும் விளையாட்டு மைதானத்தின் பணி உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

விளையாட்டு மைதானம்

மத்திய வட்டார துணை ஆணையாளர், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-126க்குட்பட்ட சாந்தோம் கால்பந்து மைதானம், சவுத் கேனல் சாலையில் புதிய அரங்கம் அமைப்பது தொடர்பாகவும், அப்பகுதியில் குப்பைக் கழிவுகளை தரம் பிரித்து வழங்குவது குறித்தும், வார்டு-111க்குட்பட்ட மார்டன் ஸ்கூல் சாலையில் புதிய விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பாகவும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின்போது மண்டல அலுவலர்கள், செயற் பொறியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT