சென்னை,
மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டுப் பணிகள் குறித்து இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
இன்று (04.11.2026) மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) சரவணன், சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) , சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலம், வார்டு-84க்குட்பட்ட பிடாரியம்மன் கோவில் 4ஆவது தெரு, சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் மேம்பாடு பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும், பட்டரவாக்கம், பெரியகுளம் பூங்கா, வார்டு-86க்குட்பட்ட அம்பிட் சாலை, சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் சாலை, நடைபாதை, தெரு மின் விளக்கு, மழைநீர் வடிகால் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு செய்து, மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின்போது மண்டல அலுவலர்கள், செயற் பொறியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.