துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன் 
தமிழக செய்திகள்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள்: வட்டார துணை ஆணையாளர்கள் ஆய்வு

மாடுகள் காப்பகத்தினை முறையாக பராமரித்திடவும், மயான பூமியை தூய்மையாக பராமரித்திடவும் அலுவலர்களுக்கு துணை ஆணையாளர் அதாப் ரசூல் அறிவுறுத்தினார்.

சென்னை,

சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை வட்டார துணை ஆணையாளர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

ஆய்வு

சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மை பணிகளை வட்டார துணை ஆணையாளர்கள் இன்று (25.11.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன் ஆய்வு

வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன், சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், வார்டு-57க்குட்பட்ட கல்யாணபுரம், யானைக்கவுனி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணி, வார்டு-59க்குட்பட்ட சிவானந்தா சாலையில் நடைபெற்று வரும் சிறப்புத் திட்ட மேம்பாட்டுப் பணி, வார்டு-60க்குட்பட்ட கொடிமரச்சாலை பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணி, அர்மேனியன் தெருவில் உள்ள உணவகத்தில் உற்பத்தியாகும் பெருமளவு கழிவுகளை முறையாக தரம் பிரித்து பெறப்படும் பணி, வார்டு-61க்குட்பட்ட பாந்தியன் முதல் தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாகவும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

துணை ஆணையாளர் கௌஷிக் ஆய்வு

மத்திய வட்டார துணை ஆணையாளர் கௌஷிக், சென்னை மாநகராட்சி, அண்ணா நகர் மண்டலம், வார்டு-98க்குட்பட்ட கே.கே. நகர், 10ஆவது தெருவில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணி, வார்டு-99க்குட்பட்ட ப்ரிக்லின் சாலையில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி, அப்பகுதியில் உள்ள அரிஹந்த் குடியிருப்பு பகுதியில் பெருமளவு குப்பைக் கழிவுகளை தரம் பிரித்து பெறப்படும் பணி, வார்டு-100க்குட்பட்ட பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் சறுக்குப் பூங்கா (Skating Park) பணி, வார்டு-104க்குட்பட்ட கோயம்பேடு, திருமங்கலம் பகுதிகளில் அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் அகற்றும் பணி உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

துணை ஆணையாளர்அதாப் ரசூல் ஆய்வு

தெற்கு வட்டார துணை ஆணையாளர்அதாப் ரசூல், சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், வார்டு-157க்குட்பட்ட பெல் நகர் பகுதியில் வீடுகள் தோறும் குப்பைகளை முறையாக தரம் பிரித்து பெறப்படும் பணி, வார்டு-158க்குட்பட்ட எம்.ஜி.ஆர்.சாலையில் உள்ள நவீன மாடுகள் காப்பகம், நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையம், மாயான பூமி, வார்டு-160க்குட்பட்ட புது தெருவில் உள்ள அம்மா உணவகம், எம்.கே.என். சாலையில் உள்ள கால்வாயில் தூர்வாரும் பணி மேற்கொள்வது தொடர்பாக, மார்கோஸ் தெருவில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணி உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து, கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்திடவும், அம்மா உணவகத்தினை தூய்மையாகப் பராமரித்திடவும், கால்வாயில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளவும், மாடுகள் காப்பகத்தினை முறையாக பராமரித்திடவும், மயான பூமியை தூய்மையாக பராமரித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT