பருவதமலை 
தமிழக செய்திகள்

திருவண்ணாமலை பருவதமலையில் இன்று பக்தர்கள் மலையேறத் தடை

நிலைமை சீரானதும் வழக்கம் போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பருவதமலை மல்லிகார்ஜுனசுவாமி கோவிலுக்கு பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய இன்று ஒருநாள் மட்டும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து பருவதமலை மலையேறும் பாதைகளில் கடுமையான வழுக்கல் ஏற்பட்டும், நிலச்சரிவு அபாயமும் உள்ளது.

பக்தர்கள் மலையேறத் தடை

இதனால் பருவதமலை மல்லிகார்ஜுனசுவாமி கோவிலுக்கு பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய இன்று (வெள்ளிக்கிழமை) ஒருநாள் மட்டும் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து தற்காலிகத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளன. மலை அடிவாரப் பகுதியில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், பக்தர்கள் இன்று பருவதமலைக்கு வருவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். நிலைமை சீரானதும் வழக்கம் போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT