தமிழக செய்திகள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்

கோவிலின் கட்டிடக்கலை, சிறப்ப கலை மற்றும் பிரம்மாண்ட அழகை பொதுமக்கள் வியப்புடன் பார்வையிட்டனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் பள்ளிகளுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், இன்று மே தினம் என்பதாலும், தொடர்ந்து வார விடுமுறைகள் வருவதாலும், பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினரோடு பல்வேறு சுற்றுலா தளங்களுக்கும், கோவில்களுக்கும் படையெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் இன்று பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலின் கட்டிடக்கலை, சிறப்ப கலை மற்றும் பிரம்மாண்ட அழகை பொதுமக்கள் வியப்புடன் பார்வையிட்டனர். யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கும் பெரிய கோவிலில், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.