தமிழக செய்திகள்

மாநிலம் முழுவதும் காவல் நடைரோந்து மேற்கொள்ள டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு

தற்போது பல இடங்களில் அமபடுத்தப்பட்டுள்ள காவல் நடை ரோந்துக்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதாக மகேஷ் குமார் அகர்வால் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் குற்றங்களை தடுக்கும் வகையில் காவல்துறை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் காவல்துறையினரை நடை ரோந்து மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

* காவல் நடைரோந்தின்போது குற்றம் நடைபெறும் இடங்களுக்கு அதிகாரிகள் நேரடியாகச் சென்று மக்களிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*சட்டம் ஒழுங்கு தொடர்பான சவால்களை முன்கூட்டியே அறிந்து நடவடிக்கை எடுக்க நடை ரோந்து உதவுகிறது.

* தற்போது பல இடங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள காவல் நடைரோந்துக்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் ஒரு மணி நேரம் நடை ரோந்து நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்துவது, வழிப்பறி சம்பவங்களை கட்டுப்படுத்துவது பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக நடை ரோந்து நடத்தப்படுவதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT