தமிழக செய்திகள்

தனுஷ் புதிய கட்சி: உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க திட்டமா?

நடிகர் தனுஷ் தனது கட்சிக்கு 'தமிழக எழுச்சிக் கழகம்' என்று தனுஷ் பெயர் சூட்டியுள்ளாராம்.

சென்னை,

விரைவில் பொதுவெளியில் தனது அரசியல் நிலைப்பாட்டை தனுஷ் அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கோலோச்சிய விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். 2 ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தற்போது முதல்-அமைச்சராக அரியணை ஏறியுள்ளார்.

ரசிகர் நற்பணி மன்றம்

அவரைத்தொடர்ந்து முன்னணி நடிகர்களான சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரும் அரசியலுக்கு வரப்போவதாக அவ்வப்போது பேச்சுகள் அடிபட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தனுஷ் மீது அனைவரது கவனமும் இருந்து வந்தது. காரணம், முன்னணி நடிகராக திரைப்பயணத்தில் வேகம் காட்டி வரும் அவர், மறுபுறம் தனது ரசிகர் நற்பணி மன்றத்தையும் ஒரு சேர வலுப்படுத்தி வருவதுதான்.

புதிய அரசியல் கட்சி

சமீபத்தில் தனது ரசிகர் மன்றத்தை மாவட்ட ரீதியாக பிரித்து மாவட்ட தலைவர்களை தனுஷ் நியமித்தார். தொகுதி வாரியாகவும் மன்றத்துக்கு உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வந்தது. இதற்கிடையில் தலைமை தேர்தல் கமிஷனில் புதிய அரசியல் கட்சியின் பெயரை தனுஷ் சார்பில் பதிவு செய்திருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.

விரைவில் அறிவிப்பு

அதன்படி தனது கட்சிக்கு 'தமிழக எழுச்சிக் கழகம்' என்று தனுஷ் பெயர் சூட்டியுள்ளாராம். விரைவில் பொதுவெளியில் தனது அரசியல் நிலைப்பாட்டை தனுஷ் அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் கட்சியின் கொடி, கொள்கைகள், கோட்பாடுகள் உள்ளிட்டவைகளும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க திட்டமா?

இது குறித்து தனுஷ் ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: தீவிர அரசி​யலில் ஈடு​பட​வுள்ள தனுஷ், விஜய் போலவே கட்சி தொடங்கி, வரும் உள்​ளாட்சி தேர்​தல், மக்​களவை தேர்​தலில் போட்​டி​யி​டா​மல் நேரடி​யாக 2031-ல் நடை​பெறவுள்ள சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார்” என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, அவர் தொடங்க உள்ள கட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

SCROLL FOR NEXT