சென்னை,
அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
சட்டசபையில் பதிலளிக்க முடியாமல், திருச்சியில் வீர வசனம் பேசியுள்ளார் விஜய்.சட்டமன்றத்தில் ஏன் கையை ஆட்டி பேசவில்லை? உதயநிதி கேட்ட கேள்விக்கு ஏன் பதில் இல்லை?
அல்லு சில்லு என அதிமுகவைச் சொல்லிவிட்டு, அவர்களின் வீட்டுக்குச் சென்று சந்தித்து சட்டப்பேரவையில் ஓட்டு வாங்கினீர்களே, அப்போது தெரியவில்லையா?நீங்கள் என்ன நாரசக்தியா? நீங்கள் சாதி மதம் பார்த்து வேட்பாளர்களை நிறுத்தவில்லையா? சுற்றுச்சூழல் மற்று சுற்றுலாத்துறைக்கு வித்தியாசம் தெரியாமல் அமைச்சர்கள் உள்ளனர்.
ப்ரோ விஜய் என்று நாங்களும் கேட்போம். ப்ரோ விஜய் பத்திரிகையாளர்களை ஏன் சந்திக்கவில்லை? மின்சார தடைக்கு ஸ்டாலின் அரசுதான் காரணம் என்று ஏன் சொல்கிறீர்கள்? ஏதேனும் நல்ல முடிவை எடுங்கள்.மேகதாது விவகாரத்தில் முதல்-அமைச்சர் ஒரு ஆளே இல்லை என்று டி.கே.சிவக்குமார் பேசியதற்கு உங்கள் பதில் என்ன?
கச்சதீவு விவகாரம், பக்ரீத் தீர்ப்பு உள்ளிட்ட விஷயங்களில் தவெக அரசு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் திமுக - அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு, கட்சியின் 2-ம் கட்ட, 3-ம் கட்ட தலைவர்கள் பேசி இருக்கலாம். எங்கள் தலைவர் அப்படி ஏதும் பேசவில்லை என்றார்.