தமிழக செய்திகள்

நான் முதல்வன் உதவித் தொகை திட்டத்தின் நிதியை அரசு நிறுத்தியதா? - தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்

சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாக தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

நான் முதல்வன் ( போட்டித் தேர்வு ) உதவித் தொகை திட்டத்தின் நிதியை தமிழ்நாடு அரசு நிறுத்தியதாக பரவும் தவறான தகவல்

பரவும் செய்தி

நான் முதல்வன் ( போட்டித் தேர்வு ) உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இம்மாதம் வழங்கப்படும் உதவித்தொகை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன?

இது முற்றிலும் தவறான தகவல்.

இது தொடர்பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அளித்துள்ள விளக்கத்தில், "பயனாளிகளுக்கான உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரம் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். அந்தவகையில், ஜூன் மாதத்திற்கான உதவித்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான தகவலைப் பரப்பாதீர்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.