தமிழிசை சவுந்தரராஜன் 
தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. குறுஞ்செய்தி அனுப்பினாரா? இல்லையா? தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

லெக்டர் புகார் அளிக்கவில்லை என்றுதான் சொல்கிறார்களே தவிர எம்.எல்.ஏ. குறுஞ்செய்தி அனுப்பினாரா? இல்லையா? என்பதில் விளக்கம் இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியி ருப்பதாவது:-கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜாவுக்கு த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷிடம் இருந்து குறுஞ் செய்தி வந்ததாக கலெக்டர் எந்த புகார் அளிக்க வில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு ஏன் இவ்வளவு தாமதம்? செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த தகவல் பரவி கொண்டிருக்கிறது, கண்டனத்திற்குரியதாகி கொண்டிருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் தேசிய மகளிர் ஆணையத்துக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்? தாமதப்பட்ட நீதியே மறுக்கப்பட்ட நீதியாக இருக்கும் போது தாமதப்பட்ட இந்த விளக்கத்தை தமிழ்நாட்டு மக்கள் எப்படி எடுத்து கொள்வது?.அது மட்டுமல்ல, கலெக்டர் புகார் அளிக்கவில்லை என்றுதான் சொல்கிறார்களே தவிர எம்.எல்.ஏ. குறுஞ்செய்தி அனுப்பினாரா? இல்லையா? என்பதில் விளக்கம் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT