தமிழக செய்திகள்

மினி லாரி மோதி முதியவர் பலி

அரூர்:

அரூர் அருகே உள்ள எருமியாம்பட்டியை சேர்ந்தவர் கைலாசம் (வயது 70). இவர் நேற்று சைக்கிளில் சின்னாங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அரூர்- சேலம் சாலையில் டி.புதூர் பிரிவு சாலை அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிரே வந்த மினி லாரி சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கைலாசம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக கோபிநாதம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT