தமிழக செய்திகள்

குட்டி ஈனும் சமயத்தில் சிரமம்: காட்டு யானை உயிரிழப்பு

குட்டியை ஈன முடியாமல் ஏற்பட்ட சிரமம் காரணமாக காட்டு யானை உயிரிழந்தது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தின் வனச் சரக பகுதிகளில் சமீப காலமாகவே காட்டு யானைகள் உயிரிழப்பது அதிகரித்து கொண்டே வருகின்றன. இந்த நிலையில் அங்குள்ள மசினகுடி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது மாயாறு அவரல்லா பிரிவு கவியல்லா வனப்பகுதியில் 25 வயது பெண் காட்டு யானை உயிரிழந்து கிடப்பதை கண்டனர்.

குட்டி ஈனும் சமயத்தில்

பின்னர் துணை இயக்குனர் வித்யாதர் தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று பார்வை யிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் காட்டு யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். தொடர்ந்து முக்கிய உறுப்புகள் ஆய்வக பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, குட்டி ஈனும் சமயத்தில், குட்டியை ஈன முடியாமல் ஏற்பட்ட சிரமம் காரணமாக காட்டு யானை உயிரிழந்து விட்டது என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT