தமிழக செய்திகள்

கன்னியாகுமரி, நெல்லையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு

கன்னியாகுமரியில் போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுத்தரச் சிறப்பாகப் புலனாய்வு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா உள்ளிட்ட போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு பாராட்டினார்.

திருநெல்வேலி,

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய போலீசாரை திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுத்தரச் சிறப்பாகப் புலனாய்வு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா மற்றும் நீதிமன்றப் பணியைச் சிறப்பாக மேற்கொண்ட தலைமைக் காவலர் மெர்சிபாய், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலைய பாலியல் பலாத்கார வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுத்தர நீதிமன்றப் பணியைச் சிறப்பாக மேற்கொண்ட தலைமைக் காவலர் வெங்கடேஸ்வரி மற்றும்

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலைய கூட்டுக் கொள்ளை வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுத்தர நீதிமன்றப் பணியை சிறப்பாக மேற்கொண்ட தலைமைக் காவலர் பார்வதி ஆகியோரை இன்று (31.10.2026) திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு, சரக அலுவலகத்திற்கு நேரில் அழைத்துப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.

SCROLL FOR NEXT