தமிழக செய்திகள்

திண்டுக்கல்: பாலியல் தொழில் புரோக்கர் கைது- 2 பெண்கள் மீட்பு

திண்டுக்கல் அருகே அறிவு திருக்கோவில் பகுதியில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடைபெறுவதாக மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே அறிவு திருக்கோவில் பகுதியில் பாலியல் தொழில் புரோக்கரை கைது செய்த போலீசார், அங்கிருந்த 2 பெண்களை மீட்டனர்.

பாலியல் தொழில்- தகவல்

திண்டுக்கல் அருகே அறிவு திருக்கோவில் பகுதியில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடைபெறுவதாக மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் நகர் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மீனாட்சி, தாடிக்கொம்பு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் அறிவு திருக்கோவில் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

புரோக்கர் கைது, 2 பெண்கள் மீட்பு

அப்போது அப்பகுதியில் வீட்டில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த அனிதா(எ) முத்துலட்சுமியை கைது செய்து, அங்கிருந்து 2 பெண்களை மீட்டு தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT