தமிழக செய்திகள்

திண்டுக்கல்: தொட்டில் கட்டி விளையாடியபோது கழுத்து இறுகி மாணவன் சாவு

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 8ம் வகுப்பு மாணவன் ஒருவன் சேலையில் தொட்டில் கட்டி விளையாடினான்.

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்தவர் செங்கோல்ராஜ். இவரது மனைவி திலகா. இந்த தம்பதிக்கு ரென்ஸோ (வயது 14) என்ற மகன் இருந்தான். இவன் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் செங்கோல்ராஜ் கோவாவுக்கு டிரைவர் வேலைக்காக சென்று விட்டார். நேற்று முன்தினம் காலை திலகா பஞ்சாலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த ரென்ஸோ சேலையில் தொட்டில் கட்டி விளையாடினான்.

அப்போது தொட்டில் ரென்ஸோ கழுத்தில் சுற்றி இறுக்கியது. இதில் மூச்சுத் திணறி அவன் பரிதாபமாக இறந்தான்.