தமிழக செய்திகள்

இயக்குனர் பாரதிராஜா மறைவு: பிரேமலதா விஜயகாந்த் இரங்கல்

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கேப்டன் முதன்முதலில் இணைந்து நடித்த திரைப்படம் தமிழ்செல்வன்.

சென்னை,

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பாதாவது:-

பிரபல திரைப்பட முன்னணி இயக்குனர் பாரதிராஜா உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்கிற செய்தி மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கேப்டன் முதன்முதலில் இணைந்து நடித்த திரைப்படம் தமிழ்செல்வன். தமிழ் பாரம்பரியத்தையும் கிராமியக் கதைகளையும் திரைப்படங்களுடன் இணைத்து, திரைப்படத்தை ஒரு பாடமாகத் திரையுலகிற்கு வழங்கி, திரையுலகின் பல்கலைக்கழகமாக விளங்கியவர் பாரதிராஜா.

இரங்கல்

கேப்டன் மீது பேரன்பும் மரியாதையும் கொண்டவர். அனைவரிடமும் அன்போடும் பாசத்தோடும் பழகக்கூடியவர். பழகுவதற்கு மிகவும் இனிமையான ஒரு மனிதர். அவரது இழப்பு திரையுலகிற்கு பேரிழப்பு. அவருடைய ஆன்மா சாந்தியடையவும், அவரை இழந்து வாடும் திரையுலகினருக்கும். குடும்பத்தாருக்கும் தேமுதிக சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.